தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் ஆஸ்திரேலியா, ஜப்பான் உட்பட மொத்தமாக 23 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்துள்ளது. அந்த உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் ஆஸ்திரேலியா, ஜப்பான் உட்பட மொத்தமாக 23 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
அதோடு மட்டுமின்றி ஓமிக்ரான் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நாடுகளில் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.