உலக சுகாதார மையம், இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 40 இலட்சம் மக்கள் உயிரிழந்ததாக தெரிவித்ததற்கு சுகாதார அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
குஜராத் மாநிலத்தில் இருக்கும் கேவடியாவில், ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல கவுன்சிலின் 14-ஆம் மாநாடு நடந்தது. இதில் பல மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். அப்போது உலக சுகாதார மையம், இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 40 லட்சம் மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்று தெரிவித்தது.
இதனை கடுமையாக எதிர்த்த சுகாதாரத்துறை அமைச்சர்கள், இந்தியாவில் ஏற்படும் கொரோனா உயிரிழப்புகள் அதிகாரபூர்வமாக வெளிப்படையாக பதிவிடப்படுகிறது, உலக சுகாதார மையத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்கள்.
மேலும் இதுபற்றி சுகாதாரத்துறை அமைச்சரான மன்சுக் மாண்டவியா தெரிவித்ததாவது, கொரோனா உயிரிழப்புகள் தொடர்பான எங்களின் எண்ணிக்கை மதிப்பீட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம். கொரோனா தடுப்பு தொடர்பில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்தியாவின் நற்பெயரை கெடுப்பதற்கு முயற்சி நடக்கிறது என்று கூறியிருக்கிறார்.