Categories
உலக செய்திகள்

ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவுமா…? உலக சுகாதார மையம் அளித்த விளக்கம்…!!!!

உலக சுகாதார மையமானது, ஒமிக்ரான் வைரஸ் அதிகமான பாதிப்புகளை உண்டாக்குமா? என்பது தொடர்பில் விளக்கம் அளித்திருக்கிறது.

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக ஓமிக்ரோன் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டது. எனவே உலக நாடுகள், தென் ஆப்பிரிக்க நாடுகளுடனான விமான போக்குவரத்தை தடை செய்து வருகின்றன. அதே சமயத்தில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வரும் மக்களுக்கும் மத்திய அரசு பல விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், உலக சுகாதார மையம், ஓமிக்ரோன் வைரஸ் தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, ஓமிக்ரோன் வைரஸ் வேகமாக பரவுமா? என்பது தற்போது வரை உறுதிப்படுத்தப்படவில்லை. அதே சமயத்தில் டெல்டா வகை வைரஸ் மற்றும் வேறு வகை தொற்றுடன் ஒப்பிட்டால், இந்த ஒமிக்ரான் வைரஸ், அதிக வீரியத்துடன் பரவும் என்பதற்கு தரவுகள் இல்லை.

மேலும், அதிக பாதிப்புகளை உண்டாகுமா? என்பது தொடர்பிலும் தற்போது வரை தெரியவில்லை. இது மட்டுமல்லாமல் ஓமிக்ரோன் வகை தொற்றுக்கான அறிகுறிகள் மற்ற வைரஸ் அறிகுறிகளிலிருந்து மாறுபட்டது என்பதை உறுதிப்படுத்தும் தகவல்களும் இல்லை என்று கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |