சீனா தயாரித்த சினோவேக் என்ற தடுப்பூசியை அவசர கால உபயோகத்திற்கு, உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு, சீன தயாரிப்பான சினோவேக் என்ற கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை அவசரகால உபயோகத்திற்கு பயன்படுத்துவதற்கு அனுமதியளித்துள்ளது.
இதற்கு முன்பு சீனா தயாரித்த சினோபார்ம் என்ற தடுப்பூசிக்கும் உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில் இரண்டாவது முறையாக சீன தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. உலக சுகாதார அமைப்பு அனுமதியளித்ததால், உலக நாடுகளும், எளிதில் அனுமதியளித்து, இறக்குமதி செய்து, உபயோகிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இது மட்டுமல்லாமல் கோவேக்ஸ் தடுப்பூசி திட்டத்தின் வாயிலாக ஏழை நாடுகளுக்கும் இத்தடுப்பூசியை அளிக்கமுடியும். ஏற்கனவே சினோவேக் தடுப்பூசி இந்தோனேசியா, துருக்கி, பிரேசில், மெக்சிகோ, தாய்லாந்து மற்றும் சிலி போன்ற நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது.