சமூக இடைவெளியை பின்பற்றாத மூன்று கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதனால் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை அனைவரும் பின்பற்றுகின்றனரா என்று ஆய்வு செய்ய அதிகாரிகள் மாசி வீதி, அம்மன் சன்னதி, கீழ மார்க்கெட் ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது சமூக இடைவெளியை பின்பற்றாத 7 கடைகளுக்கு ரூபாய் 20200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூட்டம் அதிகமாக கூடிய 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக விதியை மீறி செயல்படுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் எச்சரித்துள்ளார். அத்துடன் சீல் வைக்கப்பட்ட மற்றும் அபராதம் விதிக்கப்பட்ட கடைகள் மேல் விளக்குத்தூண் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.