Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நாங்க சொல்லுறத கேளுங்க…. மொத்தம் 50 பேர்…. அபராதம் விதித்த அதிகாரிகள்….!!

முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 50 பேருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக அத்தியாவசியத் தேவை இன்றி முக கவசம் அணியாமல் வெளியே சுற்றித் திரிந்த 50 பேரை பிடித்து காவல்துறையினர் தலா 200 ரூபாய் அபராதம் வசூலித்தனர்.

Categories

Tech |