Categories
கிரிக்கெட் விளையாட்டு

சி.எஸ்.கேவிலிருந்து வெளியேறப்போகும் வீரர்கள் யார்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்படவுள்ள 5 வீரர்களின் பெயர் பட்டியல் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் முக்கியமான அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே). முதல் சீசனில் இருந்து கடைசியாக நடைபெற்ற தொடர்வரை அனைத்து சீசன்களிலும் சிஎஸ்கே அணி அரையிறுதி, பிளே-ஆஃப் போட்டிகளுக்கு தகுதிபெற்றுள்ளது. அதுமட்டுமல்லாது மூன்று முறை சாம்பியன் மகுடத்தைச் சூடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐந்து முறை இரண்டாவது இடமும் பிடித்துள்ளது.

 Image result for csk 2018 final match

இதனால் ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே பிற அணிகளுக்கு எப்போதும் சிம்ம சொப்பனமாகவே உள்ளது. கடந்த இரண்டு சீசனிலும் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியில் அதிக அளவிலான மூத்த வீரர்கள் இடம்பெற்றிருந்ததால் அந்த அணியை பலரும் டாடிஸ் ஆர்மி என கிண்டல் செய்தனர். இருப்பினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணி 2018இல் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

Image result for csk 2018 final match

கடந்த சீசனிலிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சென்னை அணி ஒரு ரன்னில் மும்பை அணியிடம் கோப்பையை பறிகொடுத்தது. இதனிடையே அடுத்த ஐபிஎல் சீசனுக்கான வீரர்களின் ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இந்த ஏலத்திற்கு முன் ஐபிஎல் அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை மாற்றம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இதற்கு நவம்பர் 14ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

Related image

இதைத்தொடர்ந்து டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகள் தங்கள் அணியில் மாற்றம் செய்தன. இதனிடையே வீரர்களை மாற்றம் செய்வதற்கான கடைசி நாளான நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அணியிலிருந்து விடுவிக்கப்படவுள்ள ஐந்து வீரர்களின் பெயர் வெளியாகும் என பதிவிட்டிருந்தது.

Image result for csk 2019 final match

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் கழட்டிவிடவுள்ள வீரர்கள் குறித்த புதிய தகவல் கசிந்துள்ளது. அதன்படி அந்த அணியில் உள்ள முரளி விஜய், கேதர் ஜாதவ், அம்பத்தி ராயுடு, ஷ்ரத்தல் தாக்கூர், கரண் சர்மா, மோஹித் சர்மா, டேவிட் வில்லி, சாம் பில்லிங்ஸ் ஆகியோர்களில் எவரேனும் ஐந்து பேரை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

Image result for csk 2019 final watson

இதில் அம்பத்தி ராயுடுவை மட்டும் மீண்டும் சென்னை அணி ஏலத்தில் வாங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வீரர்கள் கடந்த சீசனில் பெரிதாக சோபிக்கத் தவறியதே இந்த முடிவுக்கு காரணமாகவும் அமைந்துள்ளது. கடந்த சீசனின் போது சென்னை அணி வெற்றிபெற்று இறுதிபோட்டி வரை முன்னேறினாலும் அந்த அணியின் மிடில் ஆர்டரில் மாற்றம் தேவை என்று அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் தெரிவித்திருந்தார்.தோனி, ரெய்னா, வாட்சன், டூபிளஸ்ஸிஸ் ஆகியோருக்கு வயது ஆகிக்கொண்டிருப்பதால் அவர்கள் இன்னும் ஒன்றிரண்டு சீசன்களில் மட்டுமே விளையாட முடியும்.

Image result for csk 2019 final deepak chahar dhoni

மேலும் சென்னை அணி வேகப்பந்துவீச்சில் தீபக் சஹார் கைக்கொடுத்தாலும் மற்றுமொரு வேகப்பந்துவீச்சாளருக்கான தேவையும் உள்ளது. ஸ்பின்னர்களை பொறுத்தவரையில் இம்ரான் தாஹிர், ஜடேஜா, ஹர்பஜன் ஆகியோர் கைக்கொடுக்கின்றனர்.இதுபோன்ற காரணங்களால் சென்னை அணியில் நிச்சயம் இளைய ரத்தத்தை பாய்ச்ச வேண்டும் என்ற நோக்கில் இந்தாண்டு ஏலத்தில் சிஎஸ்கேவின் தேர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |