செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், குடும்ப தலைவிகளுக்கு காசு கொடுக்க முடியல. ஆயிரம் ரூபாய் கொடுக்குறேன்னு சொன்னீங்க. அப்போது நீங்க என்ன சாக்கு சொன்னீங்க ? நிதி வலிமை இல்ல. அவ்வளவு பொருளாதாரப் பெருக்கம் இல்லை. நிதி ஆதாரம் இல்லை. அதனால கொடுக்க முடியலன்னு சொன்னீங்க.
இதுக்கு எப்படி 696 கோடி வந்துச்சு ? எப்படி வந்துச்சு ? யாரு கேட்டா எங்க பிள்ளைகள் எல்லாம், எங்களுக்கு படிக்க போறோம் ஆயிரம் ரூபாய் கொடுங்கன்னு சொன்னாங்களா ? இல்ல. அந்த கல்வியின் தரத்தை உயர்த்தி அதை இலவசமாக குடுங்க. அதுக்கு நாங்க பணம் கட்டி படிக்கிறோம். இந்த 1000 ரூபாயை வச்சு ஒரு சிலிண்டர் வாங்க முடியுமா ? என்ன 150 ரூபாய் குறையுது.
கல்லூரிகளில் சேர்ந்த பிள்ளைக்கு தானே கொடுக்கிறீங்க. ஆயிரம் ரூபாயை வச்சு எந்த கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம் சொல்லுங்க ? இது திராவிட ஆட்சி அல்ல. அப்படி என்றால் ஒரே இது திராவிட ஆட்சி என்று சொல்லி இருக்கணும்ல. திராவிட மாடல் என தான் சொல்கிறார். மாடல் எப்பவும் விளம்பரம் தான் பண்ணும்.
இப்போ ஷாருக்கானோ, சல்மான்கானோ, ஐஸ்வர்யா ராயோ, ஒரு நடிகர், நடிகை யாரோ வந்தாலும் அவர்களை மாடல் என்போம்.தோனி எல்லாம் வாராரு என்றால் மாடல் அவரு. மாடல் என்றால் விளம்பரம் தான் செய்வார்கள். அப்போ பல 100 கோடிகளை கொட்டி விளம்பரம் தான் செய்கிறார்களே ஒழிய ஆட்சி எங்கே நடக்குது ? என தெரிவித்தார்.