உலக சுகாதார மையம், சுவிட்சர்லாந்தின் தடுப்பூசி திட்டத்தை கடும் விமர்சனம் செய்திருக்கிறது.
உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ராஸ் அதானம், சுவிட்சர்லாந்து உட்பட சில நாடுகளின் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி திட்டமானது ஒழுக்கநெறி ஊழல் என்று தெரிவித்துள்ளார். உலகில் உள்ள மொத்த தடுப்பூசி மருந்துகளில் மூன்றில் ஒரு பங்கை 10 நாடுகளே பயன்படுத்திவிட்டது.
இது, ஒரு ஒழுக்கநெறி ஊழல் என்று தெரிவித்துள்ளார். உலகிலுள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் ஆபத்தான நிலையில் இருக்கும் மக்களுக்கு தற்போது வரை தடுப்பூசி கிடைக்கவில்லை. இந்நிலையில் சுவிட்சர்லாந்து உட்பட பல நாடுகள் 12லிருந்து 16 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்கிறது.
தற்போதைய நிலைமையில், பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகளில் குறைந்த அளவில் தான் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. தற்போது வரை உலகில் செலுத்தப்பட்டிருக்கும் தடுப்பூசியின் அளவை கணக்கிட்டு பார்த்தால், உலகில் இருக்கும், வயதான மக்கள் மற்றும் அனைத்து சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தியிருக்கலாம் என்று கூறுகிறார். பிரிட்டன், சுவிட்சர்லாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகள் தடுப்பூசி செலுத்த மறுக்கும் மக்களுக்கும் தடுப்பூசியளித்து வருகிறது என்று விமர்சித்திருக்கிறார்.