அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, விடியலாட்சி யாருக்கோ என்னமோ தெரியல… எனக்கு விடிய மாட்டேங்குது, விடிஞ்சா தூக்கம் வர மாட்டேங்குதுன்னு சொல்லி இருக்காரு. செய்தியில் பார்க்கின்றேன்… ஆலந்தூரில் ஒரு 20 பேர் ரோட்ல கத்தி எடுத்துக்கிட்டு, கம்பு எடுத்துக்கிட்டு ராத்திரியில அவ்வளவு ஒரு அராஜகம்.
அவ்வளவு கட்ட பஞ்சாயத்து, கஞ்சா இன்னிக்கி தெரு தெருவா விற்கப்படுது. சட்டம் ஒழுங்கு என்ன நடக்குதுன்னு தமிழ்நாட்டுல தெரியல ? யாரையுமே ஒரு முதலமைச்சராக அவரால் கட்டுப்படுத்த முடியல. அதுதான் இன்னைக்கு இருக்கிற விடியல் ஆச்சு. இதுதான் திராவிட மாடலாச்சியா? இதுக்காகவா மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டாங்க.
மக்கள் உங்களுக்கு ஓட்டு போடல. உண்மைய சொல்லனும்னா.. எடப்பாடி யார் ? அப்படித்தானே போஸ்டர் ஒட்டுறாங்க. உண்மையிலேயே சொல்லுறேங்க.. எடப்பாடி பழனிச்சாமியை மரியாதைக்குரிய சின்னம்மாவும், மரியாதைக்குரிய டிடிவி சாரும் முதலமைச்சராக அறிவித்த உடனே மக்கள் கேட்டாங்க… யாருங்க இவரு ? ஓபிஎஸ்யாவது எங்களுக்கு தெரியும். யார் இந்த எடப்பாடி, அப்படின்னு சொன்னாங்க. அதை தான் இன்னைக்கு அவங்க போடுறாங்க என விமர்சனம் செய்தார்.