Categories
அரசியல் மாநில செய்திகள்

யார் கோழை…? கண்ணாடியில் பார்த்தால்…. சீமானுக்கு புரியும் – விஜயலக்ஷ்மி பதிலடி…!!

ரஜினியை கோழை என்று விமர்சித்த சீமானுக்கு நடிகை விஜயலக்ஷ்மி தகுந்த பதிலடி கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய அரசியல் வருகையை சமீபத்தில் உறுதி செய்தார். இதையடுத்து அவருடைய வருகையை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் ரஜினியின் அரசியல் வருகையை விமர்சித்தும், சிலர் வரவேற்கும் விதமாகவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீமான், “ரஜினி ஒரு கோழை” என்றும், அவருடைய தேவை அரசியலுக்கு இல்லை என்றும் கருத்து தெரிவித்தார்.

சீமானின் இந்த கருத்துக்கு நடிகை விஜயலட்சுமி தன்னுடைய முகநூல் பக்கத்தில் தற்போது பதிலடி கொடுத்திருக்கிறார். அதில், “வெளிநாட்டு ஆதரவாளர்களை வைத்து தன்னை மிரட்டிய  சீமான் தான் ஒரு கோழை. மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தை வைத்து அரசியல் செய்து வரும் சீமான், ரஜினியை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை.

ரஜினி என்ன, சீமானை போன்று வெளிநாட்டு பணத்தில் அரசியல் செய்கிறாரா? இல்லை. தன்னுடைய சொந்த பணத்தில் அரசியல் செய்கிறார். சீமான் அவர்கள் கண்ணாடி முன் நின்று பார்க்க வேண்டும். அப்போது தான், அவருக்கு தான் கோழை என்பது புரிய வரும்” என்று நடிகை லட்சுமி தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |