சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் தலித் தலைவர் என்றும் இந்துத்துவவாதி என்றும் கூறி வருபவர்களுக்கு பதில் கூறும் தொகுப்பு
இந்து மதத்தால் ஒருபோதும் சாதி அழியப் போவதில்லை இந்து மதத்தால் சமூகநீதி சாத்தியப்பட போவதில்லை இந்து மதத்தால் பெண்ணுரிமை சாத்தியப்பட போவதில்லை என எல்லாத் தளங்களிலும் இந்து மதத்தின் உண்மை முகத்தை தோலுரித்தவர் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர்.
இந்துக்கள் என்ற மாயையில் இருப்பவர்களை மாற்று தளம் நோக்கி நகரவும் வலியுறுத்தியவர் எனக்கு மேலே ஒருவரும் இல்லை எனக்கு கீழேயும் எவருமில்லை என்ற புரட்சித் தத்துவத்தை உரக்கச் சொன்னவர் அம்பேத்கர். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான புத்தகங்களைப் படைத்தவர்.
இன்றுவரை இவர்தான் இந்தியாவில் இன்று பேசும் அரசியல் சிக்கல்களுக்கு எல்லாம் அன்றே விடை கொண்டிருந்தவர். காவிரி நீருக்கான போராட்டம் துவங்கும் முன்னரே நதிகளை தேசிய மயமாக்க வேண்டும் என்ற குரலை ஒலித்தவர். தன் அறிவும் சிந்தனையும் சமூகத்துக்காக தான் இருக்க வேண்டும் என்பதை தீர்க்கமாக கொண்டிருந்தவரை ஒரு சமூகத்தின் தலைவனாக நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், இன்று இந்தியப் பொருளாதாரம் பற்றி உலகம் பேசுகிறது.
ரூபாய் நோட்டுகள் ஊதியங்கள் நமது கைகளுக்கு வருகிறது வங்கிகளின் மூலம் தேவைகள் பூர்த்தி அடைகிறது. உலக அரங்கில் இந்திய பொருளாதாரம் என்றால் விவாதிக்கப்படுகிறது. ஆர்பிஐ இந்திய ரிசர்வ் வங்கி என்ற அமைப்பின் முக்கியமானவர் அம்பேத்கர்தான்.
தமிழகத்தில் இருக்கும் பெண்களே இன்று தகப்பன் சொத்தில் சரிபாதி தமக்கும் இருக்கிறது என்று உரிமை பேசுகிறீர்களா? நினைவில் கொள்ளுங்கள் அம்பேத்கரின் சட்டத்தால் தான் இது சாத்தியமானது என்று. கிராமத்து மற்றும் பிற்போக்குத்தனமான சூழலில் வளர்க்கப்படும் பெண்களே 15 வயதை கடந்தும் உங்கள் இடுப்பில் குழந்தைகளுக்கு பதில் தோளில் புத்தகப்பை மாற்றப்பட்டிருக்கிறது என்றால் நினைவில் கொள்ளுங்கள் இது அம்பேத்கரால் தான் சாத்தியமானது என்று.
கணவரை இழந்து சமூகத்தில் இன்று நீங்கள் வாழ்ந்து வருகிறீர்கள் என்றால் மனதிற்குள் சொல்லிக் கொள்ளுங்கள் இது அம்பேத்கரால் தான் சாத்தியமானது என்று. பார்ப்பன சாதியில் பிறந்தவன் கருவிலேயே நீதிபதி ஆகும் கனவை கொண்டிருக்கிறார். தோட்டியின் மகனோ கருவில் இருக்கும்போதே தோட்டி ஆக பெற்றிருக்கும் இந்த சமூகத்தில் இன்று சட்டமும், கலையும், இலக்கியமும், பொறியியல், மருத்துவம் என பயிலும் நீங்கள் மனதுக்குள் சொல்லுங்கள் இது அம்பேத்கரால் சாத்தியமானது என்று.
அவர் திட்டங்களுக்கு அவர்தான் காரணகர்த்தா. இப்போது கூறுங்கள் அம்பேத்கர் தலித் தலைவரா? அம்பேத்கர் இந்துத்துவவாதியா? இந்திய வரலாறு பௌத்தத்துக்கும் பார்ப்பனியத்துக்குமான போராட்டமாக எப்படி இருந்தது, அதில் சாதிய காரணி ஒவ்வொரு கட்டத்தையும் எப்படி தீர்மானித்துள்ளது என்பதை விரிவாக ஆராய்ந்தவர் அம்பேத்கர். உலகிலுள்ள எல்லா மதங்களும் இறைவன் மனிதனைப் படைத்தார் என்று சொல்கிறது ஆனால் இந்து மதம் மட்டும் தான் இறைவன் ஒரு மனிதனை முகத்திலிருந்து இன்னொரு மனிதனை காலில் இருந்தும் படைத்தார் என்று சொல்கிறது என்று தன் விமர்சனத்தை முன் வைத்தவர்.
சமத்துவம் பேசிய ஒப்பற்ற தலைவரை ஒரு வட்டத்துக்குள் அடக்கும் போது அவரால் கல்வி வேலை சொத்து உரிமை என பெற்று அனுபவிக்கும் நமக்கு அவசியம் கோபம் வரவேண்டும். மக்கள் விடுதலை பெற கல்வி, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுதல், சம வாய்ப்புகளை உருவாக்குதல், மத மாற்றம் ஆகியவற்றை முழுமையாக நம்பினார் அண்ணல் அம்பேத்கர்.
மனிதர்கள் எல்லோரும் சமமானவர்கள் இல்லை என்பதில் சந்தேகம் இல்லை அவர்கள் இவ்வாறு சமமாக இல்லை என்பதால் நாம் அவர்களை சமம் இல்லாத முறையில் நடத்த வேண்டுமா? முதல் இரண்டு விஷயங்களில் சமமாக இல்லாதவர்களே சமம் இல்லாமலே நடத்தினால் என்ன ஆகும்.
நீலம் கொண்டு காவியை காலம் முழுவதும் காரி உமிழ்ந்தவரை இன்று இந்துத்துவ அம்பேத்கர் என சொல்லி அவரது சிலைக்கு பூசை வைத்துவிட்டோம். இதற்கு காரணம் நாம் தான் நாம் அவரை அண்ணிய படுத்தினோம் அந்நியர்கள் அவரை ஆட்கொண்டார்கள். அம்பேத்கரை நினைவு கூர்வது என்பது நம் மனசாட்சியை நாமே பரிசீலிப்பது என்றால் அது மிகையல்ல.