பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்க போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்ப்பை பெற்றது. நான்கு சீசன்களை கடந்துள்ள இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் வெற்றி பெற்றார்.இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீஸனில் முகின், நான்காவது சீசன் ஆரி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் வரும் ஜூன் மாதம் தொடங்கப்பட உள்ளது. அதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்று தெரியவந்துள்ளது. கடந்த நான்கு சீசன்களையும் தொகுத்து வந்த கமலஹாசன் தற்போது அரசியலில் பிஸியாக இருப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனை அவர் தொகுத்து வழங்க மாட்டார் என்று கூறப்படுகிறது.
ஆகையால் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை முன்னணி நடிகர் சிம்பு தொகுத்து வழங்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.