Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்ல அதை செய்யுங்க… எடப்பாடி தான் முதல்வர் ? காரசார விவாதம் …!!

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து செயற்குழுவில் காரசார விவாதம் நடைபெற்று வருகின்றது.

அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து நடைபெறுகிறது. தற்போது கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் முதலமைச்சர் வேட்பாளர் யார் ? என்ற விவாதம் என்பது கட்சி நிர்வாகிகள் இடையே எழுந்துள்ளது. இது தொடர்பாக பேசப்பட்டு வருவதாக முதல்கட்ட தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மூத்த அமைச்சர்கள் சிலர் முதலமைச்சர் வேட்பாளரை கட்சியை உடனடியாக அறிவிக்க வேண்டும். அதற்கான அவசியம் என்பது உள்ளது என்ற ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் அமைச்சர் தங்கமணி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரும், மூத்த நிர்வாகிகள் தம்பிதுரை உள்ளிட்டவர்களும் இன்றைய கூட்டத்தொடரில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை  விரைவில் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஓபிஎஸ் தரப்பைப் பொறுத்தவரை மாநிலங்களவை உறுப்பினர் கேபி முனுசாமி 11பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைத்து விட்டு முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யலாம் ? என்பதை முன்னிறுத்தி பேசி இருக்கிறார். 11 பேர் கொண்ட ஒரு குழுவை அதிமுக அறிவிக்க வேண்டும் என்ற ஒரு கருத்தை கருத்துக்கள்தான் பேசப்பட்டுள்ளது.

குறிப்பாக 11 பேர் கொண்ட ஒரு குழுவை அமைக்க உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் தரப்பு திட்டவட்டமாக மறுத்து விட்டார்கள். வழிகாட்டுதல் குழுவை அமைக்கத் தேவையில்லை என்று முதல்வர் தரப்பு தெரிவித்திருந்தார்கள். அதேபோன்று தான் இன்று கட்சியை நிர்வகிக்க 11 பேர் கொண்ட வழிகாட்டல் குழு அவசியமற்றது என்று முதலமைச்சர் தரப்பு தங்களுடைய கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள்.

இந்த நிலைதான் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற அந்த முடிவினை இன்றோ அல்லது விரைகளில் எடுக்க வேண்டும் என்ற ஒரு கருத்துக்களை மூத்த அமைச்சர்களும், நிர்வாகிகளும், வைத்துள்ளார்கள். ஓபிஎஸ் தரப்பு இதற்க்கு சம்மதிக்காமல் வழிகாட்டுதல் குழுவை அமைத்து விட்டு அதற்கான முடிவை மேற்கொள்ளலாம் என்றும் பேசி இருக்கிறார்கள்.

Categories

Tech |