டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி நிலவிவருகிறது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி ஏற்கனவே அறிவித்துவிட்டது. அதேபோல பாஜகவும் தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று அறிவித்தது.
கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், பாஜக சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக கிரண் பேடி முன்னிறுத்தப்பட்டார். இருந்தபோதும், அத்தேர்தலில் வெறும் மூன்று இடங்களில் மட்டுமே பாஜகவால் வெல்ல முடிந்தது. கிரண் பேடியும் தான் போட்டியிட்ட கிருஷ்ணா நகர் தொகுயில் தோல்வியடைந்தார்.
இந்நிலையில், தற்போது நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள பாஜக, இன்னும் தனது முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. இதை கிண்டல் செய்யும் வகையில் ஆம் ஆத்மி கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் இந்த ட்வீட் தற்போது வைரலாக பரவிவருகிறது.
இன்று பாஜக, அறிவித்துள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியலிலும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிர்வாலின் தொகுதிக்கு வேட்பாளரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Who's the CM candidate of @BJP4Delhi? pic.twitter.com/mU47AM1d5Q
— AAP (@AamAadmiParty) January 17, 2020