Categories
மாநில செய்திகள்

புதிய தலைமைத் தகவல் ஆணையரான ராஜகோபால் ஐஏஎஸ் யார்?

தமிழ்நாடு தலைமைத் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஆர். ராஜகோபால் ஐ.ஏ.எஸ் குறித்து இங்கே காண்போம்…

தமிழ்நாடு தலைமைத் தகவல் ஆணையராக இருந்த ஷீலா பிரியா வயது மூப்புக் காரணமாக ஓய்வு பெற்றதை அடுத்து, ஆளுநரின் செயலராக இருந்த ஆர். ராஜகோபால், தலைமைத் தகவல் ஆணையராக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

* ஆர்.ராஜகோபால் ஐ.ஏ.எஸ் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.

* 1984ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டார் ; தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் பயின்றவர்.

* மனைவி மீனாட்சியும் ஐ.ஏ.எஸ் அலுவலர்.

* ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட ஆணையராகப் பணியாற்றியுள்ளார்.

* 1990களின் இறுதியில் கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியவர்.

* தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, இளைஞர் நலத்துறை, சிமென்ட் கார்ப்பரேஷன், வேளாண்மைத்துறை, திட்டக்குழு, கலால் துறை, காதி மற்றும் கைத்தறித்துறை, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைச் செயலர், செயலராகப் பணி செய்துள்ளார்.

* கடந்த 2014 பிப்ரவரி 6இல் முதல் டெபிடேஷனில் மத்திய அரசுப் பணிக்குச் சென்றார்.

* தமிழ்நாடு ஆளுநரின் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.

Categories

Tech |