நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது. இந்திய அணியின் தோல்வியை தொடர்ந்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மீதும் விமர்சனம் எழுந்தது. மேலும் ரவிசாஸ்திரி தன்னிசையாக முடிவுகளை எடுப்பதாகவும் குற்றசாட்டு எழுந்தது.
இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க நேற்றுடன் காலக்கெடு முடிந்த நிலையில் விண்ணப்பித்தவர்களில் சிறந்தவர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற உள்ளது. கபில்தேவ் தலைமையிலான குழுவொன்று பயிற்சியாளர்களை தேர்வு செய்கிறது. இந்நிலையில் பயிற்சியாளர் நல்ல விளையாட்டு வீரர்களாக மட்டுமின்றி நல்ல முடிவு எடுக்கும் திறன் கொண்டவர் களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.