Categories
உலக செய்திகள் சற்றுமுன்

அமெரிக்க அதிபர் யார் ? முடிவு அறிவிக்க 1 மாதம் ஆகும்… வெளியான புதிய தகவல் …!!

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாக மேலும் பல நாட்கள் ஆகும் என்ற கேள்வி எழுந்திருக்கின்றது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை போக்கு வேறு மாதிரி சென்று கொண்டிருக்கின்றது. ஜோ பைடன் முன்னிலை வகித்தாலும்,  ரொம்ப பின்னடைவை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. வாக்குப்பதிவில் முறைகேடு, தேர்தலில் முறைகேடு, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு, வாக்கு எண்ணிக்கை நிறுத்துங்கள் என்றெல்லாம் அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை வைத்து வைத்து வருகின்றார். மேலும் பல இடங்களில் ட்ரம்ப் தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது. இதனால் வாக்கு எண்ணிக்கை முடிவு வர எவ்வளவு நாள் ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்திய நேரப்படி நேற்று மதியமே முடிவுகள் வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் தற்போது வரை முழுமையாக முடிவு அறிவிக்கப்படாத நிலையில், முடிவுகள் அறிவிக்கப்பட்ட பல பகுதிகளில் ட்ரம்ப் தரப்பினர் நீதிமன்றத்தை நாடியுள்ளது.  அமெரிக்காவினுடைய 50 மாநிலங்களிலும் ஒவ்வொரு தேர்தல் நடைமுறைகள் இருக்கின்றன.

ட்ரம்ப் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோரி இருக்கும் விஸ்கான்சின் மாகாணத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றால் இரு வேட்பாளர்களுக்கும் இடையேயான வித்தியாசம் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். தற்போதும் அப்படி ஒரு சூழல் தான் இருக்கிறது. இந்த சூழலில் அவர் மறு வாக்கு எண்ணிக்கை கூறினால் அதற்கான செலவு முழுவதையும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த சொல்பவரே ஏற்க வேண்டும்.

மறு வாக்கு எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். 13 நாட்களுக்குள் அந்த மறு வாக்கு எண்ணிக்கை முடிவு வெளியிட வேண்டும். ஆனால் இவை அனைத்துமே அந்தந்த மாநில முடிவுகளை முழுமையாக அறிவித்த பிறகுதான் மறு வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கும். ஒரு மாநிலத்தில் மறு வாக்கு எண்ணிக்கை எப்படியும் 20 நாட்களுக்கு மேல் ஆகும். ஒவ்வொரு மாநிலமும் வேறு வேறு விதிமுறைகள் இருக்கின்றன. அதன் காரணமாக கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக தேர்தல் முடிவுகள் அறிவிக்க தாமதமாகும் என்று கருதப்படுகிறது.

Categories

Tech |