நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
மத்தியில் ஆளும் பிஜேபி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவும் , காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன் மக்களவைத் தேர்தலின் முடிவுகள் வெளியாகும் அன்று ஆலோசனை நடத்த கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கு தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார். மேலும் இந்த அழைப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறாத மாநில கட்சிகளான பிஜூ ஜனதாதளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.