திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர் என்றும் அவர் மீது ஜாதி மதத்தை திணிக்கக் கூடாது என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வு முகாம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.அதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் மின்துறை அமைச்சர் ஜெயக்குமார் .
அப்போது அவர் கூறுகையில் திருவள்ளுவர் மீது ஜாதி மதத்தை திணிக்கக் கூடாது என தெரிவித்தார். திருவள்ளுவர் எல்லோருக்கும் பொதுவானவர் என்று கூறிய அமைச்சர் திருக்குறளை படிக்காதவன் அரை மனிதன். முழுமையாக படித்தவனே முழு மனிதன் எனவும் கூறினார். தொடர்ந்து பேசியவர் உள்ளாட்சித் தேர்தல் நடத்த அதிமுக தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.