“எங்க வீட்டு மாப்பிள்ளை” நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்ணின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல தொலைக்காட்சி சேனலான கலர்ஸ் தமிழில் கடந்தாண்டு ஒளிபரப்பான “எங்க வீட்டு மாப்பிள்ளை” நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சி முன்னணி நடிகர் ஆர்யாவுக்கு பெண் தேடும் விதத்தில் அமைந்திருந்தது. இப்போட்டியில் 16 பெண்கள் கலந்து கொண்டனர்.
ஆனால் நிகழ்ச்சியின் இறுதிக் கட்டத்தில் நடிகர் ஆர்யா யாரையும் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை என்று கூறி அனைவரையும் ஏமாற்றினார். ஆனால் இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற பெண்கள் அடுத்தடுத்து பிரபலமாகத் தொடங்கினார். அதன்படி இப்போட்டியில் பங்கேற்ற அபர்னதி “தென்” என்ற படத்தில் நடித்துள்ளார்.
மேலும் கேரளாவைச் சேர்ந்த சீதாலட்சுமி என்பவர் அவரது புகைப்படத்தை சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த புகைப்படத்தை பார்க்கும் போது எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவரா இவர் என்று கேள்வி எழுப்பும் வகையில் இருக்கிறது.