Categories
அரசியல் மாநில செய்திகள்

யாரு மேல பழி போடுறீங்க….! எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம் – அதிமுகவை சீண்டும் ஸ்டாலின் …!!

தமிழக முதல்வர் மக்கள் மீது பழி போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் எதிர்பார்க்காத அளவில் இருக்கிறது. தலைநகர் சென்னை கொரோனாவின் மையப்புள்ளியாக விளங்குகிறது. அங்குள்ள கோயம்பேடு சந்தை மூலமாக பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா பரவலாக அதிகரித்து தமிழகத்தையே உலுக்கிஉள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது.

இதனிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா பரவியதற்கு மக்கள், வணிகர்களின் அலட்சியமே காரணம் என்று தெரிவித்தார். தமிழக முதல்வர் மக்கள் மீதும் வணிகர்கள் மீதும் குற்றம் சாட்டியதை கண்டித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டித்துள்ளது.

கோயம்பேடு வணிகர்கள் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீது பழிபோடுவது முதல்வர் நிறுத்த வேண்டும். 1000 நிவாரணம் கொடுத்தால் அனைத்தும் முடிந்துவிட்டது என்று நினைக்காமல் 5000 நிவாரணம் வழங்க முன்வரவேண்டும். அதிமுக அரசின் நிர்வாக அலட்சியமே நோய்களுக்கு அடிப்படைக் காரணமாகும் தமிழக மக்களை பேதப்படுத்தி  தேவையற்ற பீதியை உருவாக்க முதல்வர் கைவிட வேண்டும் என்று முக.ஸ்டாலின் கண்டித்துள்ளார்.

Categories

Tech |