Categories
சினிமா தமிழ் சினிமா

உங்கள் காதலர் யார்….? ரசிகரின் கேள்வி…. ராஷி கண்ணா சொன்ன பதில்….!!

நடிகை ராஷி கண்ணா ‘உங்களுடைய காதலர் யார்’ என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

நடிகை ராஷி கண்ணா இமைக்காநொடிகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனையடுத்து, சங்கத்தமிழன், அடங்கமறு, துக்ளக் தர்பார் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழி படங்கள் மற்றும் வெப் தொடர்கள் போன்றவற்றிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகை ராஷி கண்ணாவிடம் சமூகவலைதளத்தில் ரசிகர் ஒருவர்,”  உங்களுடைய காதலர் யார்” என்று கேட்டபொழுது, அதற்கு பதிலளித்த ராஷி கண்ணா,  எனக்கு காதலர் யாரும் கிடையாது, அப்படி யாராவது இருந்தால் சொல்கிறேன் என கூறியுள்ளார்.

Categories

Tech |