அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை என்பது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கடந்த 23ஆம் தேதி அதிமுக வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் ஒற்றை தலைமை குறித்து முடிவு எடுக்கப்படும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் அது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது.
அதே நிலையில் பார்த்தோமென்றால் வரக்கூடிய 11ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட இருந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் இருக்கக்கூடிய ஓ பன்னீர்செல்வம் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரின் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக பிரதமருடன் சென்று விட்டு நேற்று சென்னை திரும்பினார்.
இந்த நிலையில் அவர் தேனி மாவட்டம் பெரியகுளம் அவர் சொந்த ஊருக்கு செல்வதற்காக தற்போது மதுரை விமான நிலையம் வந்திருக்கிறார். மதுரை விமான நிலையத்தில் அவருக்கு தென் மாவட்ட மக்களின் சார்பில் அதிமுக கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
புரட்சி தலைவர், இதயதெய்வம் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களுடைய உயிரிலும் மேலான தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் உயிரான தொண்டர்களுடன் என்றும் நான் இருப்பேன்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு 50 ஆண்டுகாலம் இந்த இயக்கத்தை மனிதாபிமான இயக்கமாக தமிழக மக்களின் அன்பையும் பெற்று 30 ஆண்டுகாலம் தமிழக முதலமைச்சராக அவர்கள் நல்லாட்சி நடத்தி இருக்கிறார்கள். இன்றைக்கு இருக்கின்ற இந்த அசாதாரணமான சூழ்நிலை யாரால் எப்படி ஏற்பட்டது ?
எவரால் இந்த சதிவலை பின்னப்பட்டதற்கு விரைவில் மக்கள் அவர்களுக்கு நல்ல தீர்ப்பு வழங்குவார்கள். அவர்கள் செய்த தவறுக்கு மாண்புமிகு புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் தொண்டர்கள் உரிய பாடத்தை, தண்டனையை வழங்குவார்கள் என்று தெரிவித்து கொள்கின்றேன் என எடப்பாடி பழனிசாமியை தான் ஓபிஎஸ் சூசகமாக குறிப்பிட்டு, எச்சரித்துள்ளார்.