Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் 50 வது படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா……? உற்சாகத்தில் ரசிகர்கள்…….!!!

சிம்புவின் 50 வது படத்தை இயக்க இருப்பவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஏஏஏ படத்தால் வந்த வினை: நடிப்புக்கு முழுக்கு போடும் சிம்பு? | Simbu to quit  acting - Tamil Filmibeat

இதனையடுத்து, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”வெந்து தணிந்தது காடு”. இந்நிலையில், சிம்புவின் 50 வது படத்தை இயக்க இருப்பவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த படத்தை சிம்புவே இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கான கதை எழுதும் பணியில் அவர் தற்போது இறங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது இவரின் ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |