Categories
உலக செய்திகள்

ஊரடங்கை தளர்த்தினால்….. பேரழிவு நிச்சயம்….. WHO தலைவர் எச்சரிக்கை….!!

ஊரடங்கை  தளர்த்தினால் பெரிய ஆபத்து ஏற்படும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் எச்சரித்துள்ளார்.

சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் தற்போது உலகம் முழுவதும் பயங்கர பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய சூழ்நிலைக்கு இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி சமூக விலகல் தான் என உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில்,

அமெரிக்கா, இந்தியா போன்ற பல நாடுகள் சமூக விலகலை கடைபிடிக்க ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. சுமார் ஒரு மாத காலத்திற்கும் மேலாக ஊராடங்கை கடைபிடித்து வரும் சில நாடுகள் அதனை தளர்த்த முடிவு செய்துள்ளன. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அட்னோம் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,

கொரோனா பாதிப்பின் மிக மோசமான நேரம் இன்னும் வரவில்லை, இனி தான் வர உள்ளது. பல நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்துவது சரியல்ல. இந்த வைரஸ் குறித்து பலர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. பேரழிவை நாம் ஒன்றிணைந்து நிறுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

Categories

Tech |