நல்ல உடல் ஆரோக்கியம் பெற வாரத்திற்கு 150 நிமிடம் கட்டாயம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உடல் ஆரோக்கியத்தை நன்றாக பராமரிக்க ஒரு சராசரி நபர் நாளொன்றுக்கு வாரம் ஒன்றுக்கு 150 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி 6லிருந்து பதினெட்டு வயதிற்குட்பட்டவர்கள் நாளொன்றுக்கு 60 நிமிடமும், 18 வயதிலிருந்து 64 வயதுக்குட்பட்டவர்கள் வார முழுமைக்கும் 150 நிமிடம் உடல் உழைப்பு அல்லது நாள் ஒன்றுக்கு 75 நிமிட கடின உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மேற்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.