கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க 12லிருந்து 15 மாதங்கள் ஆகும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக நாடுகள் அனைத்தும் அஞ்சி நடுங்கி வருகின்றனர். இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் வல்லரசு நாடுகள் தீவிரம் காட்டி வரும் இந்த சூழ்நிலையில்,
கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பது குறித்து உலக சுகாதார மையம் கருத்து தெரிவித்துள்ளது. அதில், கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க 12 முதல் 18 மாதங்கள் வரை நேரம் தேவைப்படுவதாகவும், அதற்கு முன்பாக கொரோனாவின் தாக்கம் குறைந்தாலும், மருந்து கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெறும் என தெரிவித்துள்ளது.