கொரோனாவிடமிருந்து தப்பிக்க பூண்டு மட்டும் போதாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
பூண்டு சாப்பிட்டால் கொரோனா வைரஸ் நம்மை அண்டாது என சமூக வலைதளங்களில் புதிய வதந்தி ஒன்று பரவி வருகிறது. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் பூண்டு உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வல்லமை கொண்டது. ஆனால் அது மட்டுமே வைரஸிலிருந்து நம்மை பாதுகாக்க முடியாது. அதனால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.