Categories
உலக செய்திகள்

ஒமிக்ரான் வைரஸ் புதிய தொற்றை உருவாக்குமா….? முக்கிய தகவலை வெளியிட்ட WHO….!!

ஓமிக்ரான் தொற்றிலிருந்து புதிய வைரஸ் உருவாக வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது.

உலக நாடுகளில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று பரவி வருகிறது. இந்நிலையில் ஐரோப்பாவில் இருக்கும் உலக சுகாதார மையமானது, ஒமிக்ரான் தொற்றால், புதிய வகை வைரஸ் உருவாக வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது. இதுபற்றி உலக சுகாதார மையத்தின் மூத்த அதிகாரியான கேத்தரின் ஸ்மால்புட் தெரிவித்திருப்பதாவது, உலக நாடுகளில் தற்போது ஒமிக்ரான் வேகமாக பரவி வருகிறது.

எனினும், அதன் பாதிக்கக்கூடிய திறன், டெல்டா வைரஸ்-ஐ விட குறைவாகத்தான் இருக்கிறது. இருப்பினும், ஒமிக்ரான் தொற்று ஒரு புதிய வகை தொற்றை உருவாக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கு, “IHU” என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |