இந்தியரை கொலை செய்த குற்றவாளி 7 வருடங்களுக்குப்பின் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சவுத் லேக் தஹோ நகரில் வசித்து வந்தவர் மன்பிரீத் குமன் சிங் (வயது 27). பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர. இவர் ஒரு கியாஸ் நிலையத்தில் கணக்காளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு 6-ந்தேதி மன்பிரீத் குமன் சிங் பணியில் இருந்த சமயம் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் கியாஸ் நிலையத்துக்கு வந்து மன்பிரீத் குமன் சிங்கை துப்பாக்கியால் சுட்டார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். மன்பிரீத் குமன் சிங்கின் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆனால் எந்த முன்னேற்றமும் வழக்கில் இல்லாததால் காவல்துறையினர் இந்த கொலை வழக்கு விசாரணையை கிடப்பில் போட்டனர்.
இந்நிலையில் மன்பிரீத் குமன் சிங் இறந்து 7 ஆண்டுகளுக்கு பின்னர் அவரை கொலை செய்த மர்ம நபரை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். லாஸ் வேகாஸ் நகரை சேர்ந்த சீன் டோனோஹோ (வயது 34) என்பவர் தான் மன்பிரீத் குமன் சிங்கை கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்ததை அடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தாக தெரியவந்துள்ளது.