Categories
ஆன்மிகம் இஸ்லாம்

யார் குர்பானி கொடுக்க வேண்டும்..? குர்பானி கொடுக்கும் வழிமுறை…!!

பக்ரீத் பண்டிகையில் முக்கிய இடம்பெறும் குர்பானி குறித்த நெறிமுறை மற்றும் வழிகாட்டல் குறித்து பார்க்கலாம்.

யார் ஒருவர் குர்பானி கொடுக்க வேண்டும் என்று வந்து விட்டாரோ அவர் அந்த துல்ஹஜ்  மாதத்தின் பிறை ஆரம்பத்தில் இருந்து தன்னுடைய உடலின் முடிகளை களையக் கூடாது. தன்னுடைய நகத்தையும் வெட்டக்கூடாது. உங்களில் யார் ஒருவர் குர்பானி கொடுக்க வேண்டுமென்று நாடி இருக்கிறாரோ அவர் தன்னுடைய முடியை களைய வேண்டாம் , தன்னுடைய நகங்களை வெட்டி விட வேண்டாம். முடி அல்லது தன்னுடைய நகத்தை தொட்டு விடவே வேண்டாம் என்று சொல்லப்பட்டுள்ளது.

Image result for குர்பானி

யார் குர்பானி கொடுக்கின்றார்களோ அவருக்கு மட்டும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும். குர்பானி கொடுப்பவரின் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு இந்த கட்டுப்பாடு கிடையாது. அதே போல குர்பானி கொடுக்கும் போதும் சில வழிமுறைகள் உள்ளதாகவும் சொல்லப்படுகின்றது.குர்பானி கொடுக்கும் பிராணிகள் சவுகரியமாக கிடைக்கிறது, சீப்பாக கிடைக்கிறது என்பதற்காக எந்த ஒரு ஆட்டை வேண்டுமானாலும் , எந்த மாடுகளை வேண்டுமானாலும் வாங்கி அறுத்துவிட முடியாது.
Image result for குர்பானி

அல்லாஹ்வுடைய தூதர் சொல்லும் வழிகாட்டலில் அந்த ஆடு கண் குருடான ஆடாக இருக்கக்கூடாது. அது மிகவும் மெலிந்ததாக  இருக்க கூடாது.நோண்டி ஆடாக , உணவு சாப்பிட முடியாத அளவுக்கு பலவீனமாக இருக்க கூடாது. அதே போல குரும்பணிக்கு கொடுக்கும் பிரமிக்கும் வயது என்பது அளவீடாக உள்ளது. அதில் குர்பானி கொடுக்கும்  ஓட்டமாக இருந்தால் அதன் வயது ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். மாடாக இருந்தால் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும்.ஆடாக இருந்தால் ஒரு ஆண்டு கண்டிப்பாக பூர்த்தியாகி இருக்க வேண்டும் அல்லது செம்மறி ஆடாக இருக்குமேயானால் ஆறு மாதங்கள் முழுமை அடைந்து இருக்கவேண்டும்.

Image result for குர்பானி

குர்பானி செய்து இறைச்சிகளை நாமும் சாப்பிடலாம் , நம்முடைய உறவுகளுக்கு கொடுக்கலாம் , ஏழைகளுக்கு கொடுக்கலாம். அதை அறுத்து சுத்தம் செய்தவருக்கு கூலி தனியாக கொடுக்கப்பட வேண்டுமே தவிர , குர்பானி இறைச்சி எதையும் அவர்களுக்கு கொடுக்க கூடாது. குர்பானி இறைச்சியின் எந்த உறுப்புக்களையும் கூலியாக கொடுப்பதை தவிர்க்க வேண்டும். குர்பானி செய்த இறைச்சியை மூன்றாக பிரித்து ஒன்றை தனக்காகவும் , தன்னுடைய நண்பர்களுக்கு அன்பளிப்புச் செய்வதற்காகவும் , இன்னொரு பங்கை ஏழைகளுக்கு தர்மமாகவும் கொடுப்பதற்காக பிரிப்பது மிக சிறப்பாக இருக்கும்.

Categories

Tech |