சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அமெரிக்காவை விட அதிகம் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகையே வேட்டையாடும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை பதம்பார்த்துள்ளது. அங்கே 7 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்குள்ளாகி, 39ஆயிரத்துக்கும் மேல் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திபில் ட்ரம்ப்பிடம் கேள்வி கேட்ட போது, கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா அல்ல, சீனா என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்காவில் கொரோனாவால்ஏற்பட்டுள்ள உயிரிழப்பை சீனாவிடம் ஒப்பிட்டால் சீனாவில் தான் இறப்பு விதம் அதிகம்.
உலகளவில் சுகாதாரத் துறையில் வளர்ந்து நிற்கின்ற நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கொரோனா இறப்பு வீதம் அதிகமாக இருக்கிறது. ஆனால் சீனாவில் மட்டும் உயிரிழப்பு விதம் 0.33ஆக இருக்கிறது,. இது நம்பும்படி இருக்கிறதா ? இல்லை சீனா இறப்பு விகிதம் குறித்து வெளியிட்ட தகவலை விட உண்மையில் அவர்களின் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும், இது எனக்கும் தெரியும். உங்களுக்கும் தெரியும், ஆனா நீங்க இதையெல்லாம் செய்தியாக போடுவதில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கமளித்தார்.