உலக சுகாதார அமைப்பு குழந்தைகளுக்கு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்துவது முன்னுரிமை இல்லை என்று தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசி நிபுணரான டாக்டர் கேட் ஓ பிரையன் தெரிவித்துள்ளதாவது, குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கு தடுப்பூசிகளை செலுத்த, பணக்கார நாடுகள் அதிகமாக அங்கீகரிக்கின்றன. ஆனால் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை உலக சுகாதார நிறுவனம் முதன்மையாக கருதவில்லை.
குழந்தைகளுக்கு பெரும்பாலும் கடும் நோய் பாதிப்பு ஏற்படுவது இல்லை. மேலும் உயிரிழப்புகளும் இல்லை. எனவே குழந்தைகளுடன் தொடர்பு கொண்ட பெரியவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் போதுமானது. மேலும் குழந்தைகள் மீண்டும் பள்ளி செல்லும் வரை அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்திருக்கிறார்.