சீன அரசுக்கு, கொரோனா குறித்த தகவல்களை வெளியிடுமாறு உலக சுகாதார மையமானது வேண்டுகோள் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வருடங்களாக உலகையே புரட்டி போட்ட கொரோனா சமீப மாதங்களாக அடங்கியிருந்தது. எனவே மக்கள் கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்கள். இந்நிலையில், மீண்டும் கொரோனா கோரத்தாண்டவம் ஆட தொடங்கியுள்ளது. கொரோனா தோன்றியதாக கூறப்படும் சீன நாட்டில் தான் தற்போது அதிவேகத்தில் கொரோனா பரவிக் கொண்டிருக்கிறது.
அங்கு உயிரிழப்புகளும் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா குறித்த தகவல்களை வெளியிட வேண்டும் என்று சீன நாட்டிற்கு உலக சுகாதார மையம் வேண்டுகோள் வைத்திருக்கிறது.
இது குறித்து உலக சுகாதார மையத்தின் இயக்குனராக இருக்கும் டெட்ரோஸ் அதனோம் கூறியதாவது, கொரோனா தொடங்கிய பிறகு இருக்கும் நிலை குறித்த நம் புரிதல்களில் இருக்கும் இடைவெளிகள், கொரோனாவின் அதிக கால விளைவுகளில் பாதிப்படைந்த மக்களுக்கு எந்த வகையில் சிகிச்சை மேற்கொள்வது என்று தெரியவில்லை.
இந்த தொற்று எவ்வாறு ஏற்பட்டது? என்பது குறித்த நம் புரிதலில் இருக்கும் இடைவெளிகள் வருங்கால நோயை தடுப்பதற்கு சவால்களாக இருக்கின்றன என்று கூறியிருக்கிறார். நாடு முழுக்க, பெரும் ஆபத்தில் இருக்கும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவத்தில் கவனம் செலுத்த உலக சுகாதார மையம் சீனாவிற்கு ஆதரவு தெரிவிக்கிறது என்று கூறியிருக்கிறார்.