இந்தியா மீண்டும் தடுப்பூசி தயாரித்து ஏற்றுமதி செய்ய தீர்மானித்திருப்பதை உலக சுகாதார அமைப்பு வரவேற்பதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த போது தடுப்பூசிகளை பிற நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. தற்போது நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. மேலும், தடுப்பூசிகள் தயாரிப்பும் அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது.
எனவே, இந்திய அரசு தங்களிடம் இருக்கும் உபரி தடுப்பூசிகளை, மீண்டும் ஏற்றுமதி செய்யவிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரியான மான்சுக் மாண்ட்வியா நேற்று கூறியிருக்கிறார்.
மத்திய அரசின் இந்த முடிவை, உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியான, மருத்துவர் சௌமியா சுவாமிநாதன், வரவேற்பதாக கூறியிருக்கிறார். மேலும், இது, உலகளவில் தடுப்பூசி அளிக்கப்படுவதில் சமநிலையை அடைவதற்கு உதவியாக அமையும் என்றும் கூறியிருக்கிறார்.