Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடுத்த ஆண்டு CSK கேப்டன் யார் ? – வெளியான முக்கிய அறிவிப்பு ….!

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உலக அளவில் பிரபலமானது. 8 அணிகள் விளையாடி வரும் நிலையில் இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் என்றாலே தவிர்க்க முடியாத ஒரு அணியாக விளங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமையில் பல்வேறு சாதனைகளை தனதாக்கியுள்ளது. ஆனால் தற்போதைய ஐபிஎல் சீசன் சென்னை அணிக்கு எதிர்பார்த்த மாதிரி அமையவில்லை.

தொடர் தோல்விகளை சந்தித்து, மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் கொடுத்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறியது. சென்னை அணியின் இந்த நிலைக்கு காரணம் வீரர்களின் முதிர்ச்சி, இளம்வீரர்களுக்கு மறுக்கப்படும் வாய்ப்பு என்றெல்லாம் பேசப்பட்டு வந்தது.

அதே போல கேப்டன் தோனிக்கு வயதாகிவிட்டது என்று பல்வேறு விமர்சனங்கள் பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது சென்னை அணியின் ஐபிஎல் குறித்து ஒரு அப்டேட் வெளியிட்டுள்ளது.ஒரு ஆண்டு மோசமாக அமைந்துவிட்டால் அணியில் எல்லாவற்றையும் மாற்ற வேண்டிய அவசியமில்லை என சிஎஸ்கே அணி சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த ஆண்டு போட்டியிலும் சிஎஸ்கே அணிக்கு தோனி தான் தலைமை தாங்குவார். ரெய்னா, ஹர்பஜன் ஆகியோர் விலகியது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது எனவும் அவர்  தெரிவித்துள்ளார். மகேந்திர சிங் தோனி இந்த ஐபிஎல் சீசனுடன் விலகுவார், இனி விளையாடமாட்டார் என்று கருத்து எந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு சென்னை ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |