செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் தேனி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான சயத்கான், உள் கட்சியில் தலையிட்டு கொள்ளலாம் என்று நான் சொல்லவில்லை. தினகரன் சொல்லி இருக்கிறார் நாங்கள் வரவேற்கிறோம், அவர் வரவேற்பிற்கு நாங்கள் நன்றி சொல்கிறோம். சசிகலாவும் ஓபிஎஸ் கூறியதை வரவேற்கிறார்கள்.
அன்றைக்கு என்ன தீர்மானம் சொன்னோமோ, அண்ணா திமுக இரண்டு மூன்று தேர்தலில் சந்தித்து மாபெரும் தோல்வி அடைந்ததனால், மீண்டும் அண்ணா திமுக ஒன்றிணைந்து செயல்பட்டால் நிச்சயமாக வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என்று நாம் சொன்னோம். எல்லாரையும் சேர்த்துக் கொள்வோம் என்று அன்றைக்கு சொன்னோம். சசிகலா, டிடிவி இணைந்தால் யார் தலைமையில் இருக்க வேண்டும் என்று, அப்போது முடிவு செய்யப்படும்.யூகத்திற்கு நாம் பதில் சொல்ல முடியாது.
துரோகம் என்ற வார்த்தை தவறு. அண்ணா திமுகவில் சசிகலா வந்து முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று சொல்லி, எடப்பாடியை முதலமைச்சர் ஆக்கினார்கள். முதலமைச்சர் ஆக்குனது சசிகலா. முதலமைச்சர் பதவி கொடுத்த சசிகலாவை தூக்கிபோட்டு, கட்சியில் இருந்து விலக்கிவிட்டார் இது துரோகமா? சசிகலாவினால் முதலமைச்சர் பதவியை விலகக்கூடிய சூழ்நிலை வந்த போது பதவி விலகிய ஓபிஎஸ் செய்தது துரோகமா? என கேள்வி எழுப்பினார்.