பிரிட்டனில் பிரதமரை தேர்ந்தெடுக்கக்கூடிய நேரம் நெருங்கி வரும் நிலையில் ஆய்வில் வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரிட்டன் நாட்டில் நாளை மறுநாள் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். பல சர்ச்சைகள் ஏற்பட்டதால், பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத்தொடர்ந்து, நாட்டு வழக்கத்தின் படி, கன்சர்வேட்டிவ் கட்சி தான் அடுத்த பிரதமரை தேர்வு செய்ய வேண்டும்.
இந்த பிரதமர் தேர்தலுக்கான போட்டியில் பலரும் களமிறங்கினர். எனினும், அனைத்து நிலைகளையும் கடந்து, ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் ஆகிய இருவரும் தான் இறுதி வேட்பாளர்களாக போட்டியில் இருக்கிறார்கள். இதில், ஒருவர் கட்சர்வேட்டிவ் கட்சியினரால் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார்கள்.
அவ்வாறு பிரதமராக ஒருவர் அறிவிக்கப்பட்ட பின்பும், அவர் அதிக நாட்களுக்கு பதவியில் நீடிக்க முடியாது என்று ஒரு ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. அதாவது, பிரிட்டன் வரலாற்றில் முன்பே இவ்வாறான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அதாவது முன்பிருந்த பிரதமரிடமிருந்து பதவியை பெறுபவர்கள் விரைவில் பொதுத் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
பிரிட்டன் நாட்டில் பிரதமராக ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை தான் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அதன்பின் அந்த ஆர்வம் குறைந்து விடுகிறது. அதுபோல சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், தேர்தலுக்கான மக்களின் ஆர்வம் தெரியவந்தது. எனினும், அந்த ஆய்வுகளின் படி, ரிஷி சுனக் அல்லது லிஸ் ட்ரஸ், யார் வெற்றி பெற்றாலும் அவர்களின் பதவிக்காலம் அதிக நாட்களுக்கு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.