Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி, விஜய், அஜித் யாராக இருந்தாலும்…. நாங்க போராளிகள் கூட்டம்…. சினிமா பற்றி கேட்காதீங்க… நச்சுன்னு பேசிய வேல்முருகன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இனி  தமிழ்நாடு அரசு பதவிகள் பெற வேண்டும் என்று சொன்னால், தமிழ் எழுத – படிக்க தெரிய வேண்டும். பேச தெரிய வேண்டும். தமிழில் வைக்கின்ற தேர்வில்  தேர்ச்சி பெற வேண்டும் என்கின்ற ஒரு சட்டத்தை கொண்டு வந்து சட்டமன்றத்தில், போராடி பேசி – வாதாடி – போராட்டத்தின் மூலமாக சட்டமன்ற பேச்சின் மூலமாக கொண்டு வந்தது தமிழக வாழ்வுரிமை கட்சி.

தமிழ்நாட்டில் இருக்கின்ற பெப்சி தொழிலாளர்களோ, உடல் உழைப்பு தொழிலாளர்களோ இவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதற்கு இவர்கள் பொருள் ஈட்டுகின்ற வகையில்… தமிழ்நாட்டினுடைய கதாநாயகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியாக இருந்தாலும், விஜய்யாக இருந்தாலும், அஜித் ஆக இருந்தாலும் எந்த ஒரு முன்னணி நடிகர்களாக இருந்தாலும்…

தமிழ்நாட்டு தொழிலாளர்களை வாழவைக்கின்ற வகையில் தமிழ்நாட்டில் படப்பிடிப்பு நடத்தி,  அவர்களுடைய குடும்பங்களை வாழ வைப்பதற்கு முன்வர வேண்டும் என்பது எங்களது வேண்டுகோள். வேண்டுகோள் தான் வைக்க முடியும். அது அவர்களுடைய தொழில் என தெரிவித்தார். பின்னர்: ஷாருக்கான் படத்தில் தீபிகாபடுகோன் காவி உடை அணிந்து தொடர்பான விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த வேல்முருகன், நான் அந்த படத்தை பார்க்கவில்லை. பார்த்துட்டு சொல்கிறேன், இது போராளிகள் கூட்டம் எதற்கு சினிமாவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் ? என தெரிவித்தார்.

Categories

Tech |