Categories
அரசியல் மாநில செய்திகள்

யாரு அப்பன் வீட்டு சொத்து..? சீமானை பார்த்ததும் பிபி வந்துட்டு…! DMKவை சீண்டிய நாம் தமிழர் கட்சி ..!!

கன்னியாகுமாரி மாவட்டத்தில் நடைபெறும் தாதுமணல் கொள்ளையை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் பேசிய அக்கட்சி நிர்வாகி காளியம்மாள், ஒருவன், ஒரே ஒருவன் ( சீமான்) கால் வைத்த உடனே உங்களுக்கு கதி கலங்கி விட்டது. மக்கள் படைத்திரண்ட உடனே நீங்கள் படபடத்து விட்டீர்கள். இப்போதுதான் தெரிகிறது நிறைய பேருக்கு பிபி வந்துவிட்டது என்று..  எல்லாரும் மருத்துவமனையில் அனுமதித்து விட்டார்கள், காவிரி மருத்துவமனையே நிரம்பி விடும் போலிருக்கிறது.

ஏனென்றால் அரசு மருத்துவமனைக்கு இவர்கள் போக மாட்டார்கள். நான் ஒன்று கேட்கிறேன்… அருமணல் அதாவது தாது மணலை  அள்ளுவதற்கான அனுமதியை குமரி மாவட்டத்தில் நீங்கள் கொடுக்கிறீர்கள். நான் ஒரு கேள்வியை இந்த சுற்றுச்சூழல் மதிப்பீட்டு தாக்க அறிவிக்கை வைத்திருப்பவர்களுக்கும், தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கும் நான் ஒரு கேள்வி கேட்கிறேன், கடற்கரையில் தாது மணல் எடுக்கிறீர்கள் என்றால், தமிழ்நாட்டினுடைய மண்வளம் என்பது உயிருள்ள மணல்,

ஆறு மாத காலம் வடக்கிலிருந்து தெற்காக நகரும், நான்கு மாத காலம் தெற்கிலிருந்து வடக்காக நகரக்கூடிய உயிருள்ள மணல், அந்த மணலில் நீங்கள் தாதுவை மட்டும் பிரித்து எடுத்து விட்டீர்கள் என்றால்,  மண் மணலாக மாறிவிடும், ஒன்றோடு ஒரு மணல் ஒட்டவே ஒட்டாது. உயிரற்ற மணலாக மாறுவிட்ட பிறகு,  அந்த மணல் வெறும் சாம்பலுக்கு சமம். அப்படி இருக்கும் போது ஒவ்வொரு கடற்புரத்திலும் மணல் நகர்வு நிறுத்தப்பட்டால்,  கடல் சூழியல் முழுவதுமாக பாதிக்கப்படும், கடல் அரிப்பு ஏற்படும், அந்தப் பகுதி முழுவதும் இருக்கக்கூடிய மீனவர்கள் ஒன்று கூட இருக்காது.

சி.ஆர்.எஸ் சட்டம் என்று  நீங்கள் தான் கொண்டு வந்தீர்கள். இந்த சட்டத்தில் ஒன்றாம் பிரிவில் முதல் 200 மீட்டர் இன்டெர் சைரஸ் சோனில் இருக்கக்கூடிய 200 மீட்டர் என்பது முற்றும் முழுவதுமாக தடை செய்யப்பட்ட பகுதி, பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி. எக்கொலாஜிகல் சென்சிவிட்டி ஏரியா என்று சொல்லப்பட்ட பகுதியில் கிட்டத்தட்ட 1,144 ஹெக்டர் நிலப்பரப்பை யார் எடுப்பதற்கான அனுமதி கொடுத்தார்கள்?

கடற்கரை இதுவரை யார் பாதுகாத்து வைத்திருந்தார்? நாங்கள் கடலோடி மக்கள்தான் பூர்வ குடி மக்களாக…  கடலோர படையினுடைய காவலர்களாக பாதுகாத்து வைத்திருந்த கடற்படையை எவன் அப்பன் வீட்டு சொத்தை யாருக்கு விற்பது ? என்ற கேள்வியை நாம் தமிழர் கட்சியின் மூலமாக கன்னியாகுமரி ஒட்டுமொத்த மக்களின் சார்பாக நாங்கள் முன்வைக்கிறோம் என பேசினார்.

Categories

Tech |