நடிகர் அஜித் குமார், தன் ஆரம்ப காலத்தில் ஹிட் படம் கொடுத்த இயக்குனர் வசந்த் படங்களில் ஏன் நடிப்பதில்லை? என்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
திரையுலகில் ஒரு இயக்குனர் மற்றும் நடிகரின் கூட்டணி வெற்றியடைந்தால் தொடர்ந்து அந்த கூட்டணியில் பல திரைப்படங்கள் வெளிவரும். எடுத்துக்காட்டாக, நடிகர் அஜித்குமார் மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவாவின் கூட்டணியை கூறலாம். அதன் பிறகு, இயக்குனர் வினோத் இயக்கத்தில் இரண்டு படங்கள் நடித்த அஜித், மூன்றாம் முறையாக அவருடன் இணைகிறார்.
எனினும், அஜித் நடிக்க தொடங்கிய காலகட்டத்தில் அவருக்கு வெற்றிப்படம் கொடுத்த ஒரு இயக்குனரை மட்டும் தற்போது வரை அவர் தவிர்த்து கொண்டிருக்கிறாராம். அதாவது, அஜித் நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில், இயக்குனர் வசந்த் இயக்கத்தில் ஆசை திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இத்திரைப்படம், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. எனினும், அதன் பிறகு அஜித் அவரின் இயக்கத்தில் நடிக்கவில்லை. அவருக்கு வெற்றி படத்தை கொடுத்த இயக்குனரை அவர் தவிர்க்க என்ன காரணம்? என்று தற்போது தெரிய வந்திருக்கிறது.
அதாவது இயக்குனர் வசந்த் மிகவும் கண்டிப்பானவராம். படத்தின் சீன், எப்படி வரவேண்டும் என்று சொல்கிறாரோ அப்படியே வரவேண்டும் என்று நினைப்பாராம். அதற்காக பலமுறை ஒரு சீனை எடுப்பாராம். மேலும், அதிக கண்டிப்புடன் நடந்துகொள்வாராம். எனவே தான், அஜித் அவருடன் இணைந்து நடிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.