Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தலில் அதிமுகவால் ஏன் தனித்து களம் காண இயலவில்லை?- வைகைச்செல்வன் விளக்கம்

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜகவுடன் சேர்ந்து தேர்தலை சந்திப்பதற்கான சூழல் குறித்து அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் கருத்து கூறியுள்ளார்.

நேற்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இந்த கூட்டணி குறித்து அதிமுகவின் செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறுகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்கனவே தனியாக நின்று தடம் கண்ட இயக்கம்தான்.  இருந்த போதிலும் கூட ஒரு பெரும் மெகா கூட்டணியோடு இந்த தேர்தலை சந்திக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த கழக நிர்வாகிகள் எல்லாம் எடுத்த முடிவின் அடிப்படையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் யாரோடெல்லாம் நாங்கள் கூட்டணி வைத்தோமோ அவர்களோடு தொடர்ந்து இந்த சட்டமன்ற தேர்தலிலும் பயணிப்பதற்கான ஒரு நல்ல முயற்சியாகவே இந்த முயற்சியை நாங்கள் பார்க்கிறோம்.

குறிப்பாக பாஜகவோடு இந்த தேர்தல் களத்தை அமைத்து கூட்டணி தொடரும் என்று கழகத்தினுடைய ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர், கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவித்திருக்கிறார்கள். அதையே மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் வரவேற்று இருக்கின்றார், இந்த கூட்டணி தொடரும் என்று உறுதி செய்திருக்கிறார்கள.

தமிழக மக்கள் இடத்திலேயே ஒரு மிகப் பெரிய நம்பிக்கையை தந்துள்ளது. நடந்து முடிந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் அடிப்படையில் தற்போது உள்ள சூழ்நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பத்தாண்டு காலமாக ஆட்சி செய்த நிலையில்  மேலும் மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதற்கு, மக்களை சந்திப்பதற்கான ஒரு முயற்சியாக கூட்டணியுடன் இணைந்து இந்த தேர்தல் களத்தை சந்திப்பதற்கான ஒரு முயற்சியை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மேற்கொண்டு இருக்கிறது. அதை தமிழக மக்கள் புரிந்து கொண்டு மேலும் ஆதரவு தர வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கின்றோம் என தெரிவித்தார்.

Categories

Tech |