Categories
சினிமா தமிழ் சினிமா

விவேக் இறுதிச் சடங்கில் அஜித் பங்கேற்காதது ஏன்…? ரசிகர்கள் வருத்தம்…!!!

விவேக்கின் இறுதி சடங்கில் அஜித் பங்கேற்காதது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். சமீபத்தில் நிகழ்ந்த இவரது மறைவு தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து ரசிகர்களும், திரை பிரபலங்களும் விவேக்கின் மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித் மற்றும் விஜய் உடன் சேர்ந்து விவேக் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஆனால் விவேக்கின் இறுதி சடங்கிற்கு இவர்கள் இருவருமே வரவில்லை. விஜய் தற்போது தளபதி65 படத்திற்காக ஜார்ஜியாவில் இருப்பதால் அவரால் விவேக்கின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியாமல் போயுள்ளது.

அதற்பதிலாக அவரின் தாயார் விவேக்கின் உடலை நேரில் சந்தித்து அஞ்சலி செலுத்தினார். ஆனால் அஜித் சென்னையில் தான் இருக்கிறார். அப்படியிருந்தும் விவேக்கின் மறைவிற்கு அவர் அஞ்சலி செலுத்த வராததும், இது பற்றி ஒரு அறிக்கை கூட வெளியிடாமல் இருப்பதும் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அஜித் தரப்பு வட்டாரங்கள் தெரிவிப்பது என்னவென்றால், ஒருவேளை விவேக்கின் மறைவிற்கு அஜித் வந்திருந்தால் அங்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாகி சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கும். இதனால்தான் அஜித் விவேக்கின் இறுதி சடங்கில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

Categories

Tech |