திமுக கட்சி தொண்டர்களிடம் பேசிய கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, தந்தை பெரியார் அந்த காலத்தில் பிள்ளையார் சிலையை உடைத்தார். 40, 50 வருஷத்துக்கு முன்னாடி இப்படிப்பட்ட நிலை வந்ததா ? காரணம் அன்னைக்கு சொரணை உள்ளவனாக தமிழன் இருந்தான். இதை எதிர்த்து போராட்டம் நடத்தினவர் பிராமணர்கள் கிடையாது, அத தெரிஞ்சுக்கோங்க.
எவனுக்காக நாம போராடரமோ, அவன் தான் ரோட்ல குரல் கொடுக்கிறான், வயிறு எரியுமா? எரியாதா நமக்கு. இவனுக்கு ஓட்டுரிமை கொடுத்து, பதவி கொடுத்து, ஒரு காலத்துல சென்னை கார்ப்பரேஷன் உடைய கவுன்சிலர் யாரு இருந்தாரு ?ராஜா சார் முத்தையா செட்டியார் இருந்தார்.
யு கிருஷ்ணராவ் இருந்தார், தாராச்சரியன் இருந்தார். இன்றைக்கு ஏழுமலையும், குப்பனும், முனியனும் உட்கார்ந்திருக்கிறார்கள் என்றால் அந்த சமதர்மத்தை நாட்டிலே கொண்டு வந்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை மறந்து விடக்கூடாது.
திராவிடன் என்றால் யார்? இதற்கு எதிரி யார்? ஏன் கோபப்படுகிறார்கள் நம் மீது ? பிஜேபிகாரனுக்கு இவ்வளவு கோபம் ? எச் ராஜாவுக்கு வர கோவம், அவ்வளவு வேகமாக அவர் பேசுறாரே… நம்மில் இருக்கிறவனுக்கு ஏன் வரல? என வேதனைப்பட்டார்.