Categories
சினிமா தமிழ் சினிமா

“வாரிசு அங்க ரிலீஸ் ஆகலனா உனக்கென்ன கவலை”…. கே. ராஜனின் சர்ச்சை பேச்சால் கொந்தளித்த ரசிகர்கள்…..!!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தளபதி விஜய். இவர்  தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வம்சி இயக்க ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் நிலையில், துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீசாகிறது. இதனால் அஜித் மற்றும்  விஜய் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் ஹை 5 என்ற படத்தின் நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கே. ராஜன் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது, இப்போது வீட்டில் ஆளுக்கு ஒரு அறையில் இருந்து கொண்டு வயதானவர்களை யாரும் கவனிப்பதில்லை. அந்த வலியைத்தான் இந்த படம் சொல்கிறது. அதன் பிறகு வாரிசு படத்திற்கு தெலுங்கில் தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று கவலைப்படுகிறார்கள். தெலுங்கில் கிடைக்காவிட்டால் உனக்கு என்ன கவலை. இங்கே லட்ச கணக்கில் தொழிலாளர்கள் இருக்கும்போது அவர்கள் இங்கு வைத்தா படத்தை எடுத்தார்கள். இங்கே இது போன்ற சிறிய படங்கள் மட்டும் தான் ஓட வேண்டும். நல்ல கதையை சொல்லும் இப்படம் ஓட வேண்டும் என்று கூறினார். மேலும் இந்த கருத்துக்கு தற்போது விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

Categories

Tech |