Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னங்க இப்படிலாம் பேசுறாங்க…! வருத்தப்பட்ட ஓபிஎஸ்… எச்சரித்த புகழேந்தி …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, பழனிச்சாமி பழனிச்சாமி நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள், இங்கே ஓ பன்னீர்செல்வம் என்கின்ற புரட்சித்தலைவி அம்மாவால் உருவாக்கப்பட்ட எங்களது அண்ணன் ஒருங்கிணைப்பாளர், முன்னாள் தமிழக முதல்வர் இல்லாமல் இந்த இயக்கத்தை நடத்தவே முடியாது. அவர் தற்போது ஒரு முடிவுக்கு வந்து விட்டார்.

என்னவென்றால் ஒரு காலத்தில் சேவலில்  நின்று ஜெயித்தாராம். ஆகவே கட்சியே சின்னமே இல்லை என்றாலும், நான் தனியாக சென்று ஜெய்ப்பதற்கு தயாராக இருக்கிறேன். சுயேட்சை சின்னத்தில் நிற்பதற்கு தயாராக இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

ஜெயக்குமார், சி.வி சண்முகம் கொஞ்சம் அமைதியாக இருக்கிறார்.  ஜெயக்குமார் உங்களை எச்சரிக்கிறேன், இனி நீ ஓபிஎஸ்-ஐ பற்றி தவறாக பேசினால், அடுத்த பிரஸ்மீட்டில் வேறு ஆட்கள் தான் பக்கத்தில் நிற்பார்கள், அவர்கள் குழந்தைகளோடு நிற்பார்கள், தனிப்பட்ட விஷயங்களை எடுத்தால் மிகவும் கேவலமாக போய்விடும்.

நான் எச்சரிக்கிறேன். என்னை பற்றி பேசவே முடியாது. என்னிடம் ஒன்றும் இல்லை. இதுதான் உங்களுக்கு முதலும் கடைசி எச்சரிக்கை, இந்த மாதிரி அரசியலில் அநாகரீகமாக பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். ஓபிஎஸ் வருத்தப்படுறாரு, என்னங்க இப்படிலாம் பேசுறாங்க என்று…  உதயகுமார், ஜெயக்குமார் இது மாதிரி சூழ்நிலை தான் தொடர்ந்து நிலவுகிறது என தெரிவித்தார்.

Categories

Tech |