Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏன் இப்படி சத்தமா பேசிட்டு இருக்கீங்க .? நீதிபதி ஏன் அதெல்லாம் சொல்லுறாரு….! சீமான் பரபரப்பு கேள்வி….!!

செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினி ஆளுநரை சந்தித்து அரசியல் பேச வேண்டிய அவசியம் என்ன? அத பேசறது சரியா? என கேட்குறீங்க. அரசியல் யார் வேணாலும் பேசலாம். இந்த மண்ணுல. அரசியலுக்கே வரமாட்டேன் சொன்னவரு ஆளுநரை சந்தித்து அரசியல் பேச வேண்டிய அவசியம் என்ன?

அரசியலுக்கு வரணும்னு  அவர் வந்து ஒரு கட்சியை ஆரம்பித்து இயக்கத்தை நடத்தி தேர்தலில் நிற்கிறது மட்டும் தான் அரசியல் இல்ல.தன் உரிமைக்கு பேசுகிற ஒவ்வொருத்தனும் அரசியல்வாதி தான். நாலு பேர் நிக்கும் போது கொஞ்சம் வழி விடுங்க நா போகணும் அப்படின்னு பேசற அந்த வார்த்தை அரசியல்தான்.

ஏன் பா இப்படி சத்தமா பேசிட்டு இருக்கீங்க. அப்படிங்கறதும் அரசியல் தான். அது எல்லாமே அரசியல் தான். அந்த உரிமையை ரஜினிகாந்துக்கு இருக்கா இல்லையா? அது இருக்குல்ல. அதனால கட்சி ஆரம்பிச்சு. அவர் அரசியல் கட்சி ஆரம்பிச்சு அதுக்கு கொடிய வச்சு, சின்னத்த வச்சு தேர்தலில் நிக்கிறதான் அரசியல்னு நீங்க கணக்கிட கூடாது. அப்படி கணக்கிட கூடாது.

இந்த இடத்தில் அரசியல் பேசக்கூடாது அப்படின்னு ஏதாவது இருக்கா ?  நீதிமன்றத்தில் நீதிபதிகளே இவர் ஜனநாயகத்தின் காவலர். இவர நீங்க எல்லாம் விமர்சிக்க கூடாதுனு சொல்றாங்க. அவர் ஏன் அதெல்லாம் பேசுறாரு என கேள்வி எழுப்பினார்.

Categories

Tech |