Categories
தேசிய செய்திகள்

“எதுக்கு மாஸ்க் போடம வந்த, வா ஸ்டேஷனுக்கு போகலாம்”… திருமணமான பெண்ணை மிரட்டி… கான்ஸ்டபிள் செய்த காரியம்…!!

மாஸ்க் போடாமல் சென்ற திருமணமான பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கான்ஸ்டபிளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குஜராத் மாநிலம் சூரத்தில் கான்ஸ்டபிளாக வேலைபார்க்கும் நரேஷ் கபாடியா கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையில் நின்று மாஸ்க்க்கு போடாமல் வருபவர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த சாலையில் வந்த 25 வயது பெண் ஒருவர் மாஸ்க் போடாமல் வந்ததால் அவரை கைது செய்வதாக கூறி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லாமல் வேறு ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். பிறகு அந்த பெண்ணை தவறாக படம்பிடித்து அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும் அந்தப் பெண்ணை அடிக்கடி அந்த வீட்டிற்கு வரவழைத்து பலமுறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை யாரிடமாவது கூறினால் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டலும் விடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் இதை தாங்க முடியாமல் அந்த பெண் அவரது கணவரிடம் சென்று கூறியுள்ளார். இதையடுத்து அவரது கணவர் கான்ஸ்டபிளின் வீட்டிற்கு சென்று சண்டையிட்டு உள்ளார். அந்த கான்ஸ்டபிளின் மனைவி மற்றும் அந்தப் பெண்ணின் கணவரும் இருவரும் இணைந்து காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்தனர், புகாரின் பெயரில் கான்ஸ்டபிள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Categories

Tech |