வட இந்தியாவிலேயே அவர்கள் எப்படி தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள் என்றால் ராமன் ராவணனை வதம் செய்து திரும்பி அயோத்தி மாநகரிலே ஆட்சி செய்யும்போது அங்கே இருக்கின்ற மக்கள் தங்களுடைய மகிழ்ச்சியை கொண்டாடுவதற்காக தீபாவளி என்ற பண்டிகையை உருவாக்கி கொண்டினர். அதன்பிறகு வருடம் தோறும் அந்நாள் தீபாவளி பண்டிகையாகவே பொதுமக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும் தென்னிந்தியாவை பொறுத்தவரை நரகாசுரன் என்ற ஒரு அரக்கனை வதம் செய்த போது அவன் இறக்கும் தருவாயில் தன்னுடைய தவறுகளை உணர்ந்து ஒரு வரத்தை கிருஷ்ணனிடம் பெறுகின்றான். அது என்னவென்றால் தான் இறந்த இந்நாளை மக்கள் மகிழ்ச்சியாக தீபாவளி பண்டிகை என்ற பெயரில் கொண்டாட வேண்டும் என்று கேட்டான். அந்த அரக்கனின் வேண்டு கோளுக்கு கிருஷ்ணனும் சம்மதம் தெரிவித்தார். இந்த நாளை தான் நாம் தென்னிந்தியாவில் தீபாவளி பண்டிகையாக கொண்டாடுகிறோம்.